2010-07-08 15:37:15

Peru நாட்டில் பழங்குடியினரிடையே பணிபுரிந்து வந்த அருள் சகோதரர் அந்நாட்டை விட்டு வெளியேற அரசாணை


ஜூலை 08, 2010 கடந்த இருபது ஆண்டுகளாக Peru நாட்டில் பணிபுரிந்து வந்த அருள் சகோதரர் Paul McAuley இப்புதனன்று அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
La Salle கிறிஸ்துவ சகோதரர்கள் சபையைச் சார்ந்த 62 வயதான Paul McAuley, அமேசான் காடுகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினரிடையே பணி புரிந்து வந்தார். அக்காடுகளில் தோண்டப்பட்டு வரும் எண்ணெய்க் கிணறுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பகள் குறித்து, அம்மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த சகோதரர் Paul McAuley, அம்மக்களை வன்முறைக்குத் தூண்டி வருகிறார் என்ற குற்றச் சாட்டினை முன் வைத்து, அவர் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அரசு வற்புறத்தி வந்தது.
‘Loreto சுற்றுச் சூழல் இணையம்’ என்ற ஒரு அமைப்பை 2004ம் ஆண்டு நிறுவி, அதன் மூலம் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர் மத்தியில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அருள் சகோதரர் Paul McAuley, பிற நாட்டவர் எனும் தன் நிலையை மீறி செயல் பட்டிருக்கிறார் என்பது அவரை நாட்டை விட்டு வெளியேற்றத் தகுந்த காரணம் என்று அரசின் தரப்பில் சொல்லப்படுகிறது.அருள் சகோதரர் Paul McAuley, La Salle கிறிஸ்துவ சகோதரர்கள் சபையின் ஆதரவோடு, அரசின் இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டுமெனும் விண்ணப்பத்தைச் சமர்பித்துள்ளார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.