2010-07-07 15:54:39

வெனசுவேலாவின் அரசுத் தலைவர் கர்தினால் Jorge Urosaவைப் பற்றிப் பேசி வருவதை வன்மையாகக் கண்டிப்பதாக அந்நாட்டின் ஆயர் பேரவைக் கூறியுள்ளது


ஜூலை 07, 2010 கடந்த சில நாட்களாக வெனசுவேலாவின் அரசுத் தலைவர் ஹுகோ சாவேஸ் அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்களையும், குறிப்பாக கர்தினால் Jorge Urosaவையும் பற்றித் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருவதைத் தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாக அந்நாட்டின் ஆயர்கள் கூறியுள்ளனர்.
அரசுத் தலைவரின் கூற்றுகளுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பைக் கூறிவருவதாகவும், இந்தக் கூற்றுகளால் தாக்கப்பட்ட கர்தினால் Urosaவுக்கு மக்கள் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்து வருவதாகவும் ஆயர் பேரவையின் பொதுச் செயலரான ஆயர் Jesus Gonzalez கூறினார்.வத்திக்கானும், திருச்சபையும் எவ்விதம் இயங்கி வருகிறதென எந்தவிதத் தெளிவும் இல்லாமல், அரசுத் தலைவர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியதென ஆயர் Gonsalez மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.