2010-07-07 15:55:51

ஒரே பாலின உறவுகளையும், திருமணங்களையும் சட்டப் பூர்வமாக்கும் முயற்சிக்கு எதிராக ஆர்ஜன்டீனா மக்கள்


ஜூலை 07, 2010 திருமணத்தையும், குடும்ப உறவுகளையும் வலுப்படுத்தும் நோக்குடன் திரட்டப்பட்ட 635,000 கையெழுத்துக்கள் ஆர்ஜன்டீனா பாராளுமன்றத்தில் இத்திங்களன்று சமர்ப்பிக்கப்பட்டன.
ஒரே பாலின உறவுகளையும், திருமணங்களையும் சட்டப் பூர்வமாக்கும் முயற்சி இந்த ஜூலை மாதம் 14 தேதியன்று ஆர்ஜன்டீனா பாராளு மன்றத்தில் விவாதிக்கப் படவிருக்கும் இவ்வேளையில், இந்த விவாதத்திற்கு முன், மக்களின் கருத்துக்களைக் கண்டறிய வேண்டுமெனும் கோரிக்கையுடன் இந்தக் கையெழுத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தக் கையெழுத்துக்களைச் சேர்க்கும் முயற்சிக்குப் பின்னணியில் சமுதாய அக்கறை கொண்ட 400 அமைப்புகள் உள்ளன என்றும், மக்களின் இந்த உண்மையான ஆதங்கத்தை மறுத்து, பாராளு மன்றம் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பது நல்லதல்ல என்றும் மக்கள் பிரதிநிதிகளில் ஒருவரான நிக்கொலஸ் பெர்கின்ஸ் கூறினார்.
மக்களின் கவலைகளை வெளியிடும் இந்த முயற்சியையும், இன்னும் பிற ஊர்வலங்கள், கூட்டங்கள் இவை குறித்த புகைப்படங்களையும் பாராளு மன்றத்தில் சமர்பிப்பதாக பாராளு மன்ற உறுப்பினர் Negre de Alonso உறுதி கூறினார்.ஒரு மாதத்திற்குள் ஆறு லட்சம் கையெழுத்துக்கள் திரட்டப்பட்டால், ஒரே பாலின உறவுகளைச் சட்டமயமாக்கும் அரசின் முயற்சி மக்கள் மத்தியில் எந்தவித தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்பதை மக்களின் பிரதிநிதிகள் உணர வேண்டும் என ஆயர் பேரவையின் சட்ட விவகாரங்களுக்கான குழுவின் அங்கத்தினரான Guillermo Cartasso கூறினார்.







All the contents on this site are copyrighted ©.