2010-07-07 15:54:53

இலங்கையின் வட பகுதி மக்கள் மீண்டும் அங்கு குடியமர்வதற்கு இலங்கை அரசும், கத்தோலிக்க விவசாயிகளும் உதவி வருகின்றனர்


ஜூலை 07, 2010 உள்நாட்டு போரின் போது, இலங்கையின் வட பகுதியில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் அங்கு சென்று வீடுகளைக் கட்டி, குடியமர இலங்கை அரசும், கத்தோலிக்க விவசாயிகளும் உதவி வருகின்றனர்.
மன்னார் பகுதியில் சலம்பன் (Salampan) கிராமத்தில் உள்ள தஞ்சம் தரும் அன்னை ஆலயத்தை மீண்டும் புதுப்பிக்க மீள் குடியேற்றத் துறை அமைச்சரான மில்ராய் பெர்னாண்டோ அப்பங்கு தந்தைக்கு நிதி உதவி அளித்தார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மன்னார் பகுதியில் மட்டும் ஏறத்தாழ அறுபது கோவில்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென அம்மறைமாவட்ட முதன்மை குரு அருள்தந்தை அந்தோணி விக்டர் சூசை கூறினார்.யாழ்ப்பாணம் மறைமாவட்டமும் இது போன்ற சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளதெனவும், இங்குள்ள திருச்சபையை மீண்டும் கட்டியெழுப்பும் போது, கோவில்களைச் சீரமைப்பது மட்டுமல்ல, அங்குள்ள மக்களையும், சிறப்பாக இப்போரினால் கணவனை இழந்த கைம்பெண்கள், அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு மறு வாழ்வு அளிப்பதும் மிகப் பெரும் சவால் என்று அம்மறைமாவட்ட நிதியைக் கண்காணிக்கும் அருள்தந்தை ஜான் பாப்டிஸ்ட் அந்தோனி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.