2010-07-06 13:59:29

பொதுமக்கள் ஆதரவளிப்பதால் மட்டும் கருணைக்கொலை சரியானது என்பதாகிவிடாது என்கிறார் ஆஸ்திரேலிய ஆயர்.


ஜூலை 06, 2010. ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா மாநில அரசின் ஆதரவைப் பெற்றுள்ள கருணைக்கொலை பரிந்துரைச் சட்டம் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் அம்மாநில தலை நகர் பேராயர் ஏட்ரியன் டோயல்.

பொதுமக்கள் ஆதரவளிப்பதால் மட்டும் கருணைக்கொலை சரியானது என்பதாகிவிடாது என்ற ஹோபட் பேராயர், கருணையின் அடிப்படையில் என்ற தவறான எண்ணத்துடன் ஆற்றப்படும் இச்செயல் மனித மாண்பிற்கான மதிப்புடன் ஒத்துப்போவதில்லை என்றார்.

கருணைக்கொலையை மாண்புடன் கூடிய மரணம் என முன்னேற்ற முயல்வது ஏனைய மரணங்கள் அனைத்தும் மாண்பற்ற மரணங்களாகச் சித்தரிப்பது போல் உள்ளது எனவும் கூறினார் ஆஸ்திரேலிய பேராயர் டோயல்.








All the contents on this site are copyrighted ©.