2010-07-06 13:56:59

சைனாவின் கோவில்களில் இடம் பெற்ற திருட்டு சம்பவங்களில் இரு அருட்கன்னியர்கள் காயமடைந்துள்ளனர்.


ஜூலை 06, 2010. சைனாவின் Weihui மறைமாவட்டத்தில் கோவில்களில் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து இடம் பெற்ற திருட்டு சம்பவங்களில் இரு அருட்கன்னியர்கள் காயமடைந்தனர்.

யான்ஞின் மாகாணத்தில் 30 வயது மதிக்கத்தக்க திருடன் ஒருவன் கன்னியர் மடத்தில் புகுந்து தாக்கியதில் ஓர் அருட்சகோதரிக்கு கையிலும் காலிலும் காயமும் இன்னொருவருக்கு தலையில் காயமும் ஏற்பட்டுள்ளன. அதற்கு முந்தைய நாள்தான் Weihui நகரின் கன்னியர் மடம் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது திருட்டு முயற்சியேயன்றி மத அடிப்படையிலான தாக்குதல் அல்ல எனக் கூறியுள்ள சைனக் காவல்துறை, இரு திருட்டுக்களுக்கும் தொடர்பு உண்டா என்பது குறித்தும், திருடியவர்கள் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்த ஆயர் Thomas Zhang Huaixin, திருச்சபைக் கட்டிடங்களுக்கானப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என விண்ணப்பித்தார்.








All the contents on this site are copyrighted ©.