2010-07-06 14:42:05

கல்வி விதிகள் குறித்து அமைச்சரைச் சந்திக்க உள்ளது இந்திய புரோட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ சபை.


ஜூலை 06, 2010. கிறிஸ்தவர்களின் சிறுபான்மையினருக்கான உரிமைகளைக் கட்டுப்படுத்த முயலும் கல்விக்கான உரிமை குறித்த சில விதிகள் பற்றி அமைச்சர் கபில் சிபலைச் சந்தித்து விவாதிக்க உள்ளதாக அறிவித்துள்ளன இந்தியாவின் தென்னிந்திய கிறிஸ்தவ சபையும் வட இந்திய கிறிஸ்தவ சபையும்.

ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் கீழ் இயங்கும் இவ்விரு சபைகளும், ஆகஸ்ட் மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் மனித வளம் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் கபி சிபலைச் சந்தித்து சிறுபான்மையினரின் உரிமைகள் எவ்வகையில் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து விவாதிக்க உள்ளனர்.

ஏழைகளுக்கும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருப்போருக்கும் என கிறிஸ்தவப் பள்ளிகளில் இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டிருப்பது, நன்கொடை வசூலிப்பது தடைச் செய்யப்பட்டிருப்பது, அரசு உதவியின்றியே எழைக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்குவது, கணனி வழிக் கல்வியை ஊக்குவிப்பது போன்றவைகளைத் தென்னிந்திய திருச்சபை செயல்படுத்தி வரும் நிலையில் புதிய விதிமுறைகள் இவைகளுக்கு இடையூறாகவே இருப்பதாகத் தெரிவித்தார் கர்நாடகாவின் தென்னிந்திய திருச்சபை ஆயர் வசந்த் குமார்.








All the contents on this site are copyrighted ©.