2010-07-06 13:55:45

ஆஸ்திரேலியாவில் மூன்றிற்கு ஒரு குழந்தை திருமணத்திற்கு வெளியே பிறப்பதாக ஆய்வு மையம் தெரிவிக்கிறது.


ஜூலை 06, 2010. ஆஸ்திரேலியாவில் திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டில் குடும்பங்கள் பற்றிய ஆய்வுக்கான மையத்தின் இயக்குனர் தெரிவித்தார்.

1970ம் ஆண்டு திருமணமாகாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8.3 விழுக்காடு என்றிருக்க அதுவே 2008ம் ஆண்டில் 33.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றார் இயக்குனர் ஆலன் ஹேய்ஸ்.

இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் தங்கள் வாழ்வில் பாதுகாப்பை உணர்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்ற ஹேய்ஸ், இத்தகைய சூழல்கள் குழந்தைகளில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தெளிவாக உணர முடியாமல் உள்ளது என மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.