2010-07-06 14:44:40

ஆளுக்கொரு விவிலியம் என்றத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது போபால் பெருமறை மாவட்டம்.


ஜூலை 06, 2010. இந்தியாவின் போபால் பகுதியில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்கள் தினசரி வாழ்வில் சாட்சிகளாகத் திகழ உதவும் நோக்கில் ஒவ்வொருவருக்கும் ஒரு விவிலியம் என்றத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது போபால் பெருமறை மாவட்டம்.

போபால் பெருமறை மாவட்டத்தின் இப்புதியத் திட்டத்தின் கீழ், அங்குள்ள 15,000 கத்தோலிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் ஹிந்தி மொழி புதிய ஏற்பாட்டுப்பிரதிகள் வழங்கப்படுவதுடன், இப்பெருமறைமாவட்டத்தின் ஒவ்வொரு கத்தோலிக்க குடும்பத்திற்கும் விவிலியப்புத்தகமும் இலவசமாகத் தரப்படும்.

நுகர்வுக்கலாச்சரத்தின் தாக்கத்தைத் தினசரி பெற்றுவரும் மக்கள் விவிலியத்தைத் தினமும் படிப்பதன் மூலம் தினசரி வாழ்வில் சாட்சிகளாக விளங்க முடியும் என்றார் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ.

கிறிஸ்தவர்கள் மதத்தின் அடிப்படையில் தாக்கப்படும் சூழல்களிலும் பக்தியான வாழ்வை மேற்கொள்ள தினசரி விவிலிய வாசிப்பு உதவும் என மேலும் கூறினார் பேராயர்.

பாரதிய ஜனதா கட்சி மத்திய பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னான கடந்த 7 ஆண்டுகளில் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது 150க்கும் மேற்பட்டத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசத்தின் ஏறத்தாழ 6 கோடி மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே கிறிஸ்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.