2010-07-05 15:42:58

நுகர்வுக் கலாச்சாரத்தின் பொய்யான மதிப்பீடுகள் குறித்து இளைஞர்களுக்கு உரையாற்றினார் திருத்தந்தை


ஜூலை 05, 2010. மேலும், சுல்மோனா நகரின் கரிபால்டி சதுக்கத்தின் திருப்பலிக்குப்பின் பேராலயத்தில் அப்பகுதி இளைஞர்களைச் சந்தித்த திருத்தந்தை, இன்றைய உலகம் பொருளாதார பிரச்சனைகளை மட்டும் சந்திக்கவில்லை மாறாக, பொய்யான மதிப்பீடுகளை உருவாக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தாலும் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வருங்காலத்தைக் குறித்த அவர்களின் நம்பிக்கைகளைப் பாதிப்பவைகளாக உள்ளன என்ற கவலையையும் தெரிவித்த பாப்பிறை,வாழ்வை நிறைவாக்குவதாக வாக்களிக்கும் பொய்யான மதிப்பீடுகள் வாழ்வை வெற்றிடமாக வைத்திருக்கவே உதவுகின்றன எனவும் கூறினார்.

நுகர்வுக் கலாச்சாரம் என்பது இன்றையத் தேவைகளுக்கு மனிதனை அடிமையாக்கி, கடந்த கால வரலாற்றை மறக்க வைத்து, வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவனின் திறமையை பறிப்பதாக உள்ளது என்ற கவலையும் திருத்தந்தையால் வெளியிடப்பட்டது.

சுல்மோனா நகரில் நிகழ்த்திய ஞாயிறு மூவேளை ஜெப உரையின் போது, பிறருக்கு நாம் ஒவ்வொருவரும் உதவுவதற்குக் கொண்டிருக்க வேண்டிய தாராள மனப்பான்மை குறித்தும் எடுத்துரைத்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.