2010-07-05 15:46:19

உள்ளூராட்சி தேர்தல்களில் கத்தோலிக்கர்கள் போட்டியிடவும் பொறுப்புடன் வாக்களிக்கவும் வேண்டும் என ஊக்கமளித்துள்ளனர் கேரள ஆயர்கள்.


ஜூலை 05, 2010. கேரளாவின் உள்ளூராட்சித் தேர்தல்களில் கத்தோலிக்கர்கள் போட்டியிடவும் பொறுப்புடன் வாக்களிக்கவும் வேண்டும் என ஊக்கமளித்துள்ளனர் அம்மாநில ஆயர்கள்.

இம்மாதம் 18ந் தேதி கேரளாவின் அனைத்துப் பங்குத்தளங்களிலும் வாசிப்பதற்கென ஆயர்கள் தயாரித்துள்ள மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில், கடவுள்மறுப்புக் கொள்கையுடைய சில அரசியல் கட்சிகள் கிறிஸ்தவர்களைக் கட்சி சாரா வேட்பாளர்கள் போல் நிறுத்தி மக்களை ஏமாற்ற முனையும் செயல்பாடு குறித்தும் எச்சரித்துள்ளனர்.

வாக்குகளுக்காக மக்களை ஏமாற்ற முயலும் அரசியல் கட்சிகளின் சில செயல்பாடுகள் குறித்தும் தங்கள் மேய்ப்புப்பணிச் சுற்றறிக்கையில் விளக்கியுள்ளனர் கேரள ஆயர்கள்.

மத்தியிலேயே முடக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் எவ்வாறு உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் பரவலாக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அதில் விளக்கியுள்ள ஆயர்கள், நேர்மையான, தேசப்பற்றுடைய, ஜனநாயகத்திலும் மதத்திலும் நம்பிக்கையுடைய வேட்பாளர்களே தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.

பெண்களுக்கான மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட்டு பாலின சரிநிகர் தன்மை போற்றப்படவேண்டும் எனவும் தங்கள் மேய்ப்புப் பணி சுற்றறிக்கையில் விண்ணப்பித்துள்ளனர் ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.