2010-07-03 15:37:36

வெப்பநிலை மாற்றத்தால் ஹிமாலயப் பகுதியில் அடுத்த இருபது ஆண்டுகளில் நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள்


ஜூலை 03,2010 பனிஉருகுதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசு கேட்டினால் ஹிமாலய நீர்வளம் குறைந்து வருவதால், அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் 130 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவார்கள் என்று இந்திய ஆய்வுக் கம்பெனி ஒன்று எச்சரித்துள்ளது.

பங்களாதேஷ், சீனா, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு உதவும் ஹிமாலய நீர்த்தேக்கங்கள் மற்றும் நதிகளில் 275 பில்லியன் கனமீட்டர் அளவு தண்ணீர் குறையும் என்பதால், உணவு மற்றும் தண்ணீர் பர்றாக் குறைவால், 2050ம் ஆண்டுக்குள் இருபது கோடிக்கு மேற்பட்ட மக்கள் ஹிமாலயப் பகுதியிலிருந்து புலம் பெயர்வார்கள் என்று இந்தியாவை மையமாகக் கொண்ட Strategic Foresight Group அறிவித்தது.

அடுத்த 20 ஆண்டுகளில் சீனாவிலும் இந்தியாவிலும் கோதுமை மற்றும் நெல் உற்பத்தி 50 விழுக்காடு குறையும் எனவும் இதனால் உணவு பற்றாக்குறை 20 விழுக்காடு அதிகரிக்கும் எனவும் அக்குழு கூறியது.

நேபாளத்தில் வருகிற செப்டம்பர் 27, 28 தேதிகளில் மலைநாடுகள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறவிருக்கின்றது. அதில் இப்பிரச்னைகள் விவாதிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.