2010-07-03 15:35:24

அஜெர்பைஜான் நாட்டின் நல்லிணக்க வாழ்வு, தற்போதைய நவீன முஸ்லீம் நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைகின்றது


ஜூலை03,2010 அஜெர்பைஜான் நாட்டின் நல்லிணக்க வாழ்வு, தற்போதைய நவீன முஸ்லீம் நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைகின்றது என்று திருப்பீட கலாச்சார அவை அதிகாரி கூறினார்.

பெரும்பான்மையான முஸ்லீம்களைக் கொண்ட அஜெர்பைஜான் குடியரசில் கத்தோலிக்கர் சிறுபான்மையாக இருந்தாலும் அது மிகவும் உயிரூட்டமுடன் செயல்பட்டு வருகிறது என்று திருப்பீட கலாச்சார அவையின் அருள்திரு Theodore Mascarenhas கூறினார்.

இத்திருப்பீட அவையின் ஆசியா, ஆப்ரிக்கா, ஓசினியா ஆகிய பகுதிக்குப் பொறுப்பான அருள்திரு Mascarenhas, அக்குடியரசில் ஒருகாலத்தில் கிறிஸ்தவர்கள் நசுக்கப்பட்டார்கள், ஆனால் தற்சமயம் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து வாழ்கிறார்கள் என்று கூறினார்.

முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த அஜெர்பைஜான் நாட்டு கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் Abulfas Garayev ன் அழைப்பின் பேரில் திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் தலைமையில் அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குழுவில் அருள்திரு Theodore Mascarenhas ம் ஒருவர்.








All the contents on this site are copyrighted ©.