2010-07-02 16:22:59

ஈராக்கில் வன்முறை குறைந்துள்ளது, அதேவேளை விழிப்பு தேவை, திருச்சபை அதிகாரி வேண்டுகோள்


ஜூலை02,2010 ஈராக்கில் வன்முறை குறைந்துள்ளது எனினும், அந்நாடு தொடர்ந்து விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது எனறு தலத்திருச்சபை அதிகாரி ஒருவர் அரசை எச்சரித்தார்.

பயங்கரவாதமோ அல்லது பயமோ இன்னமும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என்றுரைத்த பாக்தாத் கல்தேய ரீதி கத்தோலிக்க ஆயர் ஷ்லேமோன் வர்தூனி (Shlemon Warduni), மக்களின் பரவலான ஆதரவு பெற்ற உறுதியான அரசு தேவை என்றார்.

SIR செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஆயர் வர்தூனி, உறுதியான அரசை அமைப்பதற்கு எல்லா மக்களும் கடினமாக உழைப்பதே வன்முறையை நிறுத்துவதற்கானச் சிறந்தவழி என்று கூறினார்.

ஈராக்கில் இந்த ஜூன்மாதத்தில் இடம் பெற்ற வன்முறைச் செயல்களில் 204 அப்பாவி மக்கள், 50 காவல்துறையினர், 30 இராணுவத்தினர் என 284 பேர் இறந்தனர், எனினும் இவ்வெண்ணிக்கைக் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இடம் பெற்றதைவிடக் குறைவு என்று அந்நாட்டு பாதுகாப்பு, நலவாழ்வு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் அறிவி்த்துள்ளன. கடந்த ஆண்டு ஜூனில் சுமார் 437 பேர் கொல்லப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.