2010-07-02 16:27:42

இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் திருச்சபையின் உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்


ஜூலை02, 2010 இலங்கையில் பயங்கரவாதத் தடுப்பு விதிமுறையின் கீழ் பல மாதங்களாகத் தடுப்பு காவலில் வைக்கப்ப்டடுள்ள தமிழ் அரசியல் கைதிகள் திருச்சபையின் உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

டெய்லி மிரர் என்ற தினத்தாளில் வெளியாகியுள்ள செய்தியில், இலங்கையில் சண்டை முடிந்து ஓராண்டுக்குமேல் ஆகியிருந்தாலும், அதிகாரிகள் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றனர் என்றும், இக்கைதிகள் தங்களுக்கு உதவுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மற்றும் இலங்கை திருச்சபை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்ற குடிமக்களைப் போல தாங்களும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ விரும்புவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அத்தினத்தாள் கூறியுள்ளது.

இதற்கிடையே, கொழும்பு பேராயர் மால்கம் இரஞ்சித் இத்தகைய கடிதம் ஒன்றைப் பெறவில்லை என்று அவரது செயலர் தெரிவித்ததாகவும் ஓர் ஊடகம் கூறியுள்ளது.

இலங்கையில் பெண்கள், சிறார், இளையோர், முதியோர் உட்பட நூற்றுக்கணக்கான பேர் இன்னமும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.