2010-07-01 15:20:45

மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவுப் பிரச்சனை Houma-Thibodaux மறை மாவட்ட மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது


ஜூலை 01, 2010 மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவுப் பிரச்சனையும், சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கத்ரீனா புயலும் லூயிசியானா பகுதியில் உள்ள Houma-Thibodaux மறை மாவட்ட மக்களைப் பெரிதும் பாதித்துள்ளதென கத்தோலிக்க உதவி அமைப்பின் இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.
Houma-Thibodaux மறை மாவட்ட கத்தோலிக்க உதவி அமைப்பின் இயக்குனர் Rob Gorman தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்த எண்ணெய் கசிவுப் பிரச்சனையால், 3500 மீனவர்கள் தங்கள் தொழிலை இழந்துள்ளனர் என்றும், இன்னும் பல ஆயிரம் பேர் தங்கள் வேலைகளையும், எதிகாலத்தையும் இழக்கும் அபாயம் உள்ளதெனவும் கூறினார்.சுற்றுச் சூழல், பொருளாதாரம் என்று இருமுனைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கும் இந்த மக்கள் இன்னும் இந்த சீரழிவைச் சரி செய்வதற்கு எத்தனை நாள் ஆகும் என்பதை அறியாமல் ஒவ்வொரு நாளும் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்று Rob Gorman கூறினார்.







All the contents on this site are copyrighted ©.