2010-07-01 15:20:57

பிரேசில் Rio de Janeioroவில் சீரமைப்பு பணிகளுக்குப் பின் மீட்பராம் கிறிஸ்துவின் உருவம் மீண்டும் திறக்கப்பட்டது


ஜூலை 01, 2010 பிரேசில் Rio de Janeioro வில் கடந்த நான்கு மாதங்களாக சீரமைப்பு பணிக்காக மூடிவைக்கப்பட்டிருந்த மீட்பராம் கிறிஸ்துவின் உருவம் இப்புதன் மாலை மக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
மீண்டும் திறக்கப்பட்ட இந்த உருவம், தற்போது உலக கால்பந்து கோப்பைக்காக போட்டியிட்டு வரும் பிரேசில் வீரர்களுக்காக சிறப்பான ஒளி அமைப்புகளுடன் திறந்து வைக்கப்பட்டது.
125 அடி உயரமான இந்தத் திரு உருவம் ஒன்பது ஆண்டுகளாகக் கட்டப்பட்டு, 1931ம் ஆண்டு மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. திரு உருவத்தின் பவள விழா ஆண்டான 2006ம் ஆண்டு இந்த உருவத்தின் பாதத்தருகே ஒரு சிறு கோவில் ஒன்று கட்டப்பட்டு, Rio உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் Eusebio Oscar Scheidஆல் அர்ச்சிக்கப்பட்டது.2007ம் ஆண்டு புதிய உலக அதிசயங்களில் ஒன்றாக இந்தத் திரு உருவமும் அங்கீகரிக்கப்பட்டது. 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மின்னல் ஒன்று தாக்கியதில், இந்த திரு உருவத்தின் முகம், விரல்கள் சேதமடைந்ததால், அவற்றைச் சீரமைக்கும் பணி துவங்கப்பட்டு, இப்புதனன்று நிறைவு பெற்றது.







All the contents on this site are copyrighted ©.