2010-07-01 15:19:53

தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகும் மக்கள் விழிப்பாய் இருக்க வேண்டுமென பிலிப்பின்ஸ் ஆயர்கள் கூறியுள்ளனர்


ஜூலை 01, 2010 மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகும் விழிப்பாய் இருக்க வேண்டுமென பிலிப்பின்ஸ் ஆயர்கள் கூறியுள்ளனர்.
இப்புதனன்று பிலிப்பின்சின் 15வது அரசுத் தலைவராக மூன்றாம் Benigno Aquino பதவி ஏற்றத்தையொட்டி, தங்கள் கருத்துக்களை வெளியிட்ட ஆயர்கள் இவ்வாறு கூறினர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பிரதிநிதிகள் அனைவரும் மக்களின் பொது நலனில் அக்கறை கொண்டு நேர்மையாகச் செயல்படுகின்றனரா என்பதை மக்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று பேராயர்கள் Angel Lagdameoம் Antonio Ledesmaம் கூறினர்.இந்தப் பதவிஎற்றலை ஓட்டி திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய மணிலா உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் Gaudencio Rosales, புதிய அரசுக்கு சிறப்பான விதத்தில் செபம் செய்யவும், சீரியதொரு பிலிப்பின்ஸ் நாட்டை உருவாக்குவதில் அனைவருக்கும் கடமை உண்டு எனவும் விசுவாசிகளுக்கு அறிவுரை வழங்கினார்.







All the contents on this site are copyrighted ©.