2010-06-29 15:50:23

இலங்கை வட பகுதியில் புத்தமத துறவிகளின் பிறரன்பு நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளது இலங்கை காரித்தாஸ் அமைப்பு


ஜூன் 29, 2010. இலங்கையின் வடபகுதிக்கு வந்து மருத்துவ முகாம்கள் மூலம் தமிழர்களிடையே பணியாற்றிய புத்தமதத் துறவிகளின் செயல்பாடுகள் குறித்து பாராட்டுகளை வெளியிட்டுள்ளது கிளிநொச்சி கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

கி.மு. 3ம் நூற்றாண்டில் புத்த மதம் இலங்கைக்கு வந்ததன் நினைவாகக் கொண்டாடப்பட்ட விழாவையொட்டி இலங்கையின் வடபகுதிக்குச் சென்ற புத்தமதத் துறவிகள், மருத்துவ முகாம்கள் மூலம் பணியாற்றியதுடன் அப்பகுதியின் கிறிஸ்தவர்களோடு இணைந்து உணவு உதவிகளையும் வழங்கினர்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புத்த மதத் துறவிகளின் இச்செயல் ஆறுதல் நடவடிக்கையாய் இருந்தது என்றார் காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி குரு அருளானந்தம் ஜொனாலி யாவிஸ்.

இதற்கிடையே, 1981ம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட இலங்கை அமைச்சர் Patali Champika Ranawaka, அந்நூலகத்திற்கென பல புத்தகங்களையும் பரிசளித்தார்.








All the contents on this site are copyrighted ©.