2010-06-28 15:45:46

கொழும்புவில் 2000க்கும் அதிகமான இளையோர் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதி மொழி எடுத்தனர்


ஜூன்28, 2010 போதைப் பொருள்களைப் பயன்படுத்த மாட்டோம் என்றும், போதைப் பொருள்கள் இல்லாத இலங்கையை உருவாக்குவோம் என்றும் ஜூன் 26 சனிக்கிழமை அன்று கொழும்புவில் 2000 க்கும் அதிகமான இளையோர் உறுதி மொழி எடுத்தனர்.

ஐ.நா.வின் பரிந்துரையின் பேரில், ஜூன் 26 சனிக்கிழமை, போதைப் பொருள்களுக்கு எதிரான நாள் அனுசரிக்கப்பட்டதை ஓட்டி, இந்த உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலை நாட்டு கலாச்சாரம் இளையோர் மத்தியில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும், அவைகளில் ஒன்று இந்தப் போதைப் பொருள் பழக்கம் என்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள் மத்தியில் பணி புரியும் அருட்தந்தை ஜூட் ரோட்ரிகோ கூறினார்.

ஆயிரக் கணக்கில் இளையோர் பங்கு கொண்ட இந்த நிகழ்ச்சியில், கத்தோலிக்கர், புத்தர், முஸ்லிம் என்று அனைத்து மதத்தினரும் இணைந்து நடத்திய செப வழிபாடும், அதைத் தொடர்ந்து, ஒரு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

"நலத்தை நாடு, போதைப் பொருளை நாடாதே." என்பது இந்த ஆண்டு ஐ.நா.வின் போதைப் பொருள் ஒழிப்பு நாளுக்கான மையக் கருத்தாகும்.








All the contents on this site are copyrighted ©.