2010-06-26 16:13:44

இலங்கையில் போர்க்காலத் தமிழ் அகதிகள் மனஅழுத்தத்தால் வெகுவாய்ப் பாதிக்கப்பட்டுள்ளனர், அருட்பணியாளர்கள் கவலை


ஜூன்26,2010 இலங்கையின் வடபகுதியில் வாழும் போர்க்காலத் தமிழ் அகதிகள் மனஅழுத்தத்தால் வெகுவாய்ப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் மத்தியில் பணிபுரியும் அருட்பணியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

முகாம்களில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் உளவியல் பிரச்னைகளால் மேலும் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்த அருட்பணியாளர் எமிலியானுஸ்பிள்ளை சந்தியாபிள்ளை, அகதிகள் குடும்பங்களுடன் ஒன்றிணைய அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்.

இலங்கையில் போர் முடிந்து ஓராண்டு ஆகியிருக்கும் இவ்வேளையில் அகதிகள் தங்களின் கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும் இன்னும் சுமார் அறுபதாயிரம் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அக்குரு தெரிவித்தார்.

தற்சமயம் ஆறு குருக்கள் அகதிகள் முகாம்களைச் சந்தித்து வருகின்றனர்.

மேலும், வருகிற ஆகஸ்ட் இறுதிக்குள் அனைத்து அகதிகளும் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.