2010-06-25 16:36:03

பாரம்பரிய காமன்வெல்த் ஜோதி இந்தியா வந்தது; 100 நாட்கள் அனைத்து மாநிலங்களிலும் பயணம்


ஜூன் 25,2010: 71 நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் சார்பில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான குயீன்ஸ் பேட்டன் என்றழைக்கப்படும் பாரம்பரிய ஜோதி, இவ்வெள்ளிக்கிழமை காலை இந்தியா வந்தடைந்தது.

வரும் அக்டோபர் 3ம் தேதி துவங்கி 12 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் காமன்வெல்த் நாடுகளின் வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பர். இதற்கென டில்லியில் பல கோடிக்கணக்கில் மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை வழியாக வந்த ஜோதி சிறப்பு வரவேற்புடன் பெற்றுகொள்ளப்பட்டது.

ஒலிம்பிக் ஜோதிக்கு இணையாக கவுரவம் கொண்ட இந்த ஜோதி ஓட்டம், இரண்டாம் எலிசபெத் இராணியால் துவக்கி வைக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய ஜோதியை பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த பாரம்பரிய விழாவில் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் ராணி வழங்கினார். மேலும், காமன்வெல்த் போட்டியின் 60வது ஆண்டை முன்னிட்டு புதிய 5 ரூபாய் நாணயங்களை, இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் கவுண்டன் இன்னும் 100 நாட்கள் இருக்கிறது, இந்த ஜோதி இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்து செல்லப்படும். முதன்முதலாக பஞ்சாப் மாநிலம் பொற்கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்த விழாவில் பேசிய டில்லி முதல்வர் ஷீலாதிட்ஷீத், இந்தப் போட்டி மூலம் காமன்வெல்த் நாடுகளின் உறவு மேம்படும் என்றார்.

காமன்வெல்த் 60வது ஆண்டு சிறப்பு: புதிய 5 ரூபாய் நாணயம் வெளியீடு

காமன்வெல்த் போட்டியின் 60வது ஆண்டை முன்னிட்டு புதிய 5 ரூபாய் நாணயங்களை, இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் மாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காமன்வெல்த் 60ம் ஆண்டை முன்னிட்டு, செம்பு, துத்தநாகத்தால் ஆன, புதிய 5 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.

இந்த நாணயத்தின் முன்புறம் அசோக தூணின் "சிங்க முகமும்'' அதற்குக் கீழ் "சத்தியமேவ ஜெயதே'' என்று இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். இடது மேற்புற விளிம்புச் சுற்றுவட்டத்தில் "பாரத்' என்று இந்தியிலும், வலது மேற்புற விளிம்புச் சுற்றுவட்டத்தில் "இந்தியா' என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் பின்புற முகப்பில், "பார்லிமென்ட் ஆப் இந்தியா' என்று ஆங்கிலத்திலும், அதன் இடதுபுறத்தில் "காமன்வெல்த் 60ம் ஆண்டு' என்ற வாசகம் இந்தியிலும், வலதுபுறத்தில் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். வலதுபக்க விளிம் பில், ஆண்டு 2009 என்று இந்திய "பார்லிமென்ட்' உருவப்படத்திற்கு கீழே பொறிக்கப்பட்டிருக்கும்







All the contents on this site are copyrighted ©.