2010-06-25 13:59:30

ஜூன் 26. நாளும் ஒரு நல்லெண்ணம்


"நான் என்ன ஊர் உலகில் செய்யாததையாச் செய்துவிட்டேன்?"

எத்தனையோ பேரின் நியாயப்படுத்தல்கள் இவை.

இந்த நமக்குரிய நியாயங்கள் என்ன சொல்ல வருகின்றன?

எல்லாரும் செய்யும்போது என்னை மட்டும் தண்டிப்பது நியாயமாகாது என்றா?

இங்கு உண்மைகளை மறைத்து, நியாயங்களை மறுப்பதையே நியாயப்படுத்துவதுதான் வேடிக்கை.

இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கற்பனைகளைக் கைவிட்டு, இப்படித்தான் இருக்கிறது என்ற உண்மையை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள் என சொல்லாமல் சொல்ல வருகிறார்கள்.

நியாயப்படுத்தும் வாதத்திறமைகள் அதிகரிக்கும்போது எதுவுமே தவறில்லை என்றாகி விடும்.

"இவர் மட்டும் என்ன பெரிய ஒழுங்கா?" என்று கேட்கும்போது, நல்வாழ்வை நல்அறிவுரைகளுக்கான முன் நிபந்தனையாக்க வரவில்லை நாம். மாறாக, நம் தகுதியின்மைகள் வெளியேத் தெரியாதிருக்க அவரின் தகுதி பற்றி கேள்வி எழுப்புகிறோம்.

நியாய தர்மங்களின் படி வாழ எத்தனை பேர் தயார்?

அதற்கு முன் ஒரு கேள்வி.

"இன்றைய உலகில் நியாய தர்மங்களின்படி வாழ முடியும் என்று எத்தனை பேர் உண்மையாகவே நம்புகிறீர்கள்?








All the contents on this site are copyrighted ©.