2010-06-25 16:32:47

ஆப்ரிக்கச் சிறார்க்கென மேலும் எட்டு மொழிகளில் சிறார் விவிலியம்


ஜூன்25,2010 ஆப்ரிக்கச் சிறார்க்கென மேலும் எட்டு மொழிகளில் சிறார் விவிலியத்தை வெளியிடுவதற்கு Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த அமைப்பின் பிரிட்டன் கிளை, 27 ஆயிரத்துக்கு அதிகமான பவுண்டுகளை வழங்குவதைக் கொண்டு, ஆப்ரிக்காவுக்கெனச் சிறார் விவிலியத்தையும், உலக அளவில் பயன்படுத்தப்படுவதற்கென சிறார் விவிலிய சுவரொட்டிகளையும் அச்சிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டில் 12 இலட்சத்துக்கு மேலான விவிலியப் பிரதிநிதிகளுக்கு ஆயர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்றும் அந்தப் பிறரன்பு அமைப்பு அறிவித்தது.

ஆப்ரிக்காவில் 67 மொழிகளில் ஏறக்குறைய ஒரு கோடியே 50 இலட்சம் விவிலியப் பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.