2010-06-24 16:00:33

கனடாவில் வாழும் பழங்குடியினர் திருமுழுக்கு பெற்ற 400வது ஆண்டு விழா


ஜூன்24,2010 கனடாவில் வாழும் பழங்குடியினர் திருமுழுக்கு பெற்ற 400வது ஆண்டு விழா இவ்வியாழனன்று கொண்டாடப்படுகிறது.
Mikmaq என்ற பழங்குடி இனத்தவரின் தலைவரான Henri Membertou தன் குடும்பத்தினர் 20 பேருடன் 1610ம் ஆண்டு, ஜூன் 24 அன்று புனித மரியாவின் வளைகுடா என்றழைக்கப்படும் இடத்தில் திருமுழுக்கு பெற்றார்.
இந்த நாளை நினைவு கூறும் வண்ணம், இவ்வியாழன் அதிகாலை 5 மணி அளவில் சூரிய உதயத்தோடு சேர்ந்து செபங்கள் எழுப்பப்படும், அதைத் தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் திருப்பலி நடைபெறும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கனடாவில் வரலாற்று சிறப்பு மிக்க போர்ட் ராயல் எனும் இடத்தில், பேராயர் Martin Currie மற்றும் கனடாவுக்கான திருப்பீடத்தூதர் Pedro Quintana இவர்கள் தலைமையில் இவ்வியாழனன்று நடைபெறும் திருப்பலியில், அந்நாட்டின் ஆயர்கள் பலரும் கலந்து கொள்வர் என்று அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.Nova Scotia அரசுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு கலாச்சார மைல்கல் என்றும், இந்த நூற்றாண்டு நினைவாக எழுப்பப்பட்டுள்ள ஒரு பாரம்பரிய கிராமத்தை வரும் திங்களன்று இங்கிலாந்து அரசியும், இளவரசர் சார்லஸ்ம் பார்வையிடுவார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.