2010-06-23 16:09:39

வட, தென் கொரிய நாடுகளுக்கிடையில் ஒப்புரவு வழிகளைத் தேட வேண்டும் - கொரிய ஆயர்கள்


ஜூன்23,2010 வட, தென் கொரிய நாடுகளுக்கிடையில் அண்மையில் அதிகரித்து வரும் பதட்ட நிலையைக் குறைப்பதற்கு, ஒப்புரவு வழிகளைத் தேட வேண்டும் என்று கொரிய ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Peter Kang கூறியுள்ளார்.
இன்றைய உலகில் போர் என்பது பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த உலகம் உணர்ந்துள்ளது என்றும், போரை நிறுத்தும் மிக வலிமையான ஆயுதம் செபமே என்றும் ஆயர் Kang கூறினார்.
வட கொரியாவில் உள்ள மக்களுக்கு, சிறப்பாக, அங்குள்ள குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளைக் குறிப்பிட்டு காட்டிய ஆயர், இந்த நிலையை எளிதாக்க கொரிய காரித்தாஸ் அமைப்பு மேற்கொள்ளும் முயற்சிகளை வட கொரிய அரசு தடை செய்து வருவதைக் குறித்து தன் வருத்தத்தையும் வெளியிட்டார்.வட கொரியாவில் உள்ள ஏழ்மையும் பசியும் குறைக்கப்பட்டால், இரு நாடுகளுக்கிடையே உள்ள பதட்ட நிலை வெகுமளவு குறைய வாய்ப்புண்டு என்று கொரிய ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Peter Kang தெளிவு படுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.