2010-06-23 16:08:52

நான்கு அப்போஸ்தலர்களின் மிகப் பழைய ஓவியங்கள் உரோமை நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன


ஜூன்23,2010 பேதுரு, பவுல், ஆந்த்ரேயா, யோவான் ஆகிய அப்போஸ்தலர்களின் மிகப் பழைய ஓவியங்கள் உரோமை நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வத்திக்கான் திருப்பீடத்தின் புதை பொருள் ஆராய்ச்சி ஆணையம் மேற்கொண்ட இந்த முயற்சியால், உரோமையில் துவக்க கால கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய குகைக் கல்லறைகளில் ஒன்றான புனித தெக்லாவின் கல்லறையில் இந்த ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டதென திருப்பீடத்தின் கலாச்சார ஆணையத்தின் தலைவர் பேராயர் Gianfranco Ravasi இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பல நூறு ஆண்டுகள் இருளிலேயே கிடக்கும் இந்த ஓவியங்களை மீண்டும் அவற்றின் உண்மை நிலைக்குக் கொண்டு வருவதற்கு laser தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.இந்த ஓவியங்கள் நான்காம் நூற்றாண்டின் பின்பகுதியைச் சேர்ந்தவை என்றும், இந்த ஓவியங்களே பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் பேதுரு, பவுல், ஆந்த்ரேயா, யோவான் ஆகிய அப்போஸ்தலர்களின் முதன் முதலான ஓவியங்களாக இருக்கலாம் என்றும் புதைபொருள் பணிகளை மேற்பார்வையிடும் Fabrizio Bisconti கூறினார்.







All the contents on this site are copyrighted ©.