2010-06-23 16:20:41

ஜூன் 24 – நாளும் ஒரு நல்லெண்ணம்


உதவுங்கள்!

இப்படித்தான் எத்தனை விண்ணப்பங்கள் இன்றைய உலகில்.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த இந்த மாணவர் படிப்புத் தொடர உதவுங்கள்!

அறுவைச் சிகிச்சைக்கு உதவுங்கள்! உயிர் காக்க உதவுங்கள்! இரத்தம் கொடுத்து உதவுங்கள்!

விபத்துக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க உதவுங்கள்!

உதவுங்கள் உதவுங்கள் என உதவிக்கரங்களை நாடும் ஒராயிரம் குரல்கள்.

நம்மில் எத்தனை பேரின் காதுகளை இக்குரல்கள் எட்டியுள்ளன.

நடைபாதையில் கையேந்தும் குரல்களில் எத்தனை பேர் இறை குரலை இனம் கண்டுள்ளோம்?

அம்முகங்கள் என்றோ ஒரு நாள் எங்கோ சந்தித்தவைகளாகத் தோன்றுகின்றனவா?

ஏதோ ஒரு ஜென்ம பந்த உறவு நமக்குள் இருப்பதாகத் தோன்றவில்லையா?

நாளை இந்நிலைக்கு நாம் வரமாட்டோம் என எதை வைத்து நம்மால் உறுதி கூறமுடியும்?

பிறர்க்கு உதவவே நமக்கு இரு கைகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதற்கும்

தேவைக்கு அதிகமானவைகளைச் சேமித்து வைப்பவன் திருடன் எனச் சொல்வதற்கும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

அர்த்தங்கள் தேடி அலைபாயுது மனது, கையேந்தும் ஏழையினைப்போல்.








All the contents on this site are copyrighted ©.