2010-06-23 16:09:26

இந்தியா அடுத்த பத்து ஆண்டுகளில் சந்திக்கவிருக்கும் சவால்களைச் சமாளிக்க இந்தியத் துறவறச் சபைகளின் தலைவர்களை உருவாக்க வேண்டும்


ஜூன்23,2010 இந்தியா அடுத்த பத்து ஆண்டுகளில் சந்திக்கவிருக்கும் பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் வகையில் இந்தியத் துறவறச் சபைகளின் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று அருட் சகோதரர் Mani Mekkunnel கூறினார்.
2020ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்ததொரு நாடாக விளங்கும் என்று கூறப்படுவதால், இந்த நிலைக்குத் இந்தியத் துறவிகள் தயாராக இருக்க வேண்டும் என்று இந்தியத் துறவு சபைகள் குழுவின் செயலர் அருட் சகோதரர் Mekkunnel கூறினார்.
இந்த எதிர்பார்ப்போடு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து துறவுச் சபைகளில் உள்ள இளையோரை ஒன்று சேர்த்து, ஜூலை மாதத் துவக்கத்தில் கேரளாவின் கொச்சியில் கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பூனேயில் 1000 பேருக்கும் அதிகமாகப் பங்குபெறவிருக்கும் அகில இந்தியக் கருத்தரங்கு இந்த முயற்சிகளுக்கு முத்தாய்ப்பாக இருக்கும் என்றும் அருட் சகோதரர் Mekkunnel கூறினார்.இந்தியாவில் 1,25,000 துறவியர் உள்ளனர் என்பதும், இவர்களில் 30,000க்கும் அதிகமானோர் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.