2010-06-22 14:46:24

இந்திய தலத்திருச்சபையின் எட்டாவது தேசிய இளைஞர் மாநாடு ஷில்லாங்கில் இடம்பெற உள்ளது.


ஜூன் 22, 2010. இந்திய தலத்திருச்சபையின் எட்டாவது தேசிய இளைஞர் மாநாடு ஷில்லாங் பெருமறைமாவட்டத்தில் அக்டோபர் மாதம் 10 முதல் 17 வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"வார்த்தையை வாழ்ந்து உலகை விடுவிப்போம்" என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் ஏழ்மை ஒழிப்பு, சுற்றுச்சூழலுக்கு புத்துயிர் ஊட்டல், அமைதியைப் பரப்புதல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார் ஷில்லாங் பேராயர் டோமினிக் ஜாலா.

மூன்றாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் இந்தத் தேசிய இளைஞர் மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 2000 பிரநிதிகள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார் பேராயர்.

இந்தியாவின் வடகிழக்கு பகுதி வன்முறை நிறைந்த பகுதி என்ற தப்பெண்ணத்தை மாற்றவும், அப்பகுதிக்கே உரிய கலாச்சாரம், வரவேற்கும் பண்பு மற்றும் விசுவாசத்தைப் பகிரவும் ஷில்லாங்கில் இடம்பெற உள்ள இம்மாநாடு இளைஞர்களுக்கு உதவும் என மேலும் கூறினார் பேராயர் ஜாலா.








All the contents on this site are copyrighted ©.