2010-06-19 14:40:09

ஸ்பானியக் கத்தோலிக்கத் திருச்சபையின் பிறரன்புப் பணிகள், அரசு, கோடிக்கணக்கான யூரோக்களைச் சேமிப்பதற்கு உதவியுள்ளன - ஸ்பானிய ஆயர் பேரவை


ஜூன்19,2010 ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்கத் திருச்சபையும் அதன் உறுப்பினர்களும் செய்து வரும் பிறரன்புப் பணிகள், ஒவ்வோர் ஆண்டும் அந்நாட்டு அரசு, கோடிக்கணக்கான யூரோக்களைச் சேமிப்பதற்கு உதவியுள்ளன என்று, ஸ்பானிய ஆயர் பேரவையின் பொருளாதார விவகார ஆணையத்தின் உதவிச் செயலர் கூறினார்.

ஸ்பெயினில் 2008ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றிய பிறரன்பு மற்றும் மேய்ப்புப்பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்த Fernando Gimenez Barriocanal, ஸ்பெயினில் அதிகமானப் பிறரன்புப் பணிகளைச் செய்வது திருச்சபையே என்றும், இது விசுவாசத்தால் தூண்டப்பட்டுச் செய்யப்படுகின்றது என்றும் கூறினார்.

காரித்தாஸ், Manos Unidas போன்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகள், 4,500 மையங்களில் 28 இலட்சம் மக்களுக்கு உதவியுள்ளன, இந்த எண்ணிக்கையானது, இவ்வாண்டில் அதிகரிக்க்கூடும் எனவும் Barriocanal கூறினார்.

குருக்களும் மேய்ப்புப்பணியாளர்களும் விசுவாசிகளுக்காக 4 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மணிநேரங்களைச் செலவழித்துள்ளனர் என்றுரைத்த அவர், 2008ம் ஆண்டில் திருச்சபை, 68 கோடி யூரோக்களைச் செலவழித்துள்ளது என்று அறிவித்தார்.

கத்தோலிக்கப் பள்ளிகளில் 13 இலட்சம் மாணவர்கள் படிப்பதாகவும் அவர் கூறினார்.,








All the contents on this site are copyrighted ©.