2010-06-19 15:07:27

ஜூன் 20, நாளும் ஒரு நல்லெண்ணம்


"இது உண்மையிலேயே ஒரு பிரமாதமான கண்டுபிடிப்புதான். ஆனால், இதை யார் பயன்படுத்த விரும்புவார்கள் என்று தெரியவில்லை." 1876ல் அலெக்சாண்டர் க்ரஹாம் பெல் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அப்போது அமெரிக்க அரசுத் தலைவராக இருந்த Rutherford Hayes என்பவரிடம் காட்டியபோது, அவர் இப்படிச் சொன்னார்.
ஆனால், அடுத்த ஆண்டே 1877, ஜூன் 20 அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார். இன்று தொலை பேசி இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம்.
இதே போல், வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல கண்டுபிடிப்புகள் குறித்து தவறான கணிப்புகள் எழுந்தன. அவைகளில் ஒரு சில:

நம் உலகைப் பற்றி நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. தொடர்வோம் நம் கல்வியை.







All the contents on this site are copyrighted ©.