2010-06-18 15:02:39

மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள், குறிப்பாக இளையோர் வெளியேறுவது நிறுத்தப்பட பிதாப்பிதா Sfeir அழைப்பு


ஜூன்18,2010 சண்டைகள், பதட்டநிலைகள், தொடர் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றால் லெபனன் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக லெபனன் பிதாப்பிதா Nasrallah Sfeir கூறினார்.

பாரிசுக்கானப் பயணத்தின் போது, ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் Nicolas Sarkozy ஐச் சந்தித்த லெபனன் மாரனைட் பிதாப்பிதா Sfeir, கத்தோலிக்கத் திருச்சபையின் எதிர்காலம் குறித்த இக்கவலை, திருத்தந்தையால் பல தடவைகளில், அண்மையில் அவரது சைப்ரஸ் பயணத்தின்போதுகூட வெளிப்படுத்தப்பட்டது என்றார்.

லெபனன் நாட்டுக்குள்ளே இரண்டு இராணுவங்கள் செயல்படுவதைப் பலர் விரும்பவில்லை என்றுரைத்த பிதாப்பிதா, லெபனன் தனது அண்டை நாடுகளுடன், குறிப்பாக சிரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த விரும்புகிறது, ஆனால் அது விரும்புவது போல் நடப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள், குறிப்பாக இளையோர் வெளியேறுவது நிறுத்தப்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்







All the contents on this site are copyrighted ©.