2010-06-18 15:07:38

Kyrgyzstan வன்முறையினால் குறைந்தது நான்கு இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் - UNHCR


ஜூன்18,2010 கடந்த வாரத்தில் Kyrgyzstan ல் தொடங்கிய வன்முறையினால் குறைந்தது நான்கு இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என்று UNHCR நிறுவனம் கூறியது.

75,000 முதல் ஒரு இலட்சம் பேர் வரை Uzbekistan எல்லையைக் கடந்துள்ளதாகவும், மேலும் மூன்று இலட்சம் பேர் Kyrgyz எல்லைப் பகுதியில் இருப்பதாகவும், குறைந்தது நாற்பதாயிரம் பேருக்கு குடியிருப்பு இல்லை, பலர் உணவு, தண்ணீர் மற்றும்பிற அத்தியாவசியப் பொருட்களின்றி கஷ்டப்படுகின்றனர் என்று அந்நிறுவனம் அறிவித்தது.

இவ்வளவுக்கும் Kyrgyzstan மக்கள்தொகையே சுமார் 53 இலட்சம்தான் என்று ஐ.நா.கூறியது.








All the contents on this site are copyrighted ©.