2010-06-17 15:08:45

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு கோடி மக்கள் பட்டினியால் மடியும் அபாயம் உள்ளதென காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது


ஜூன்17,2010 மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு கோடி மக்கள் பட்டினியால் மடியும் அபாயம் உள்ளதால், உலக நாடுகள் இந்த உணவு பற்றாக்குறையை நீக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென காரித்தாஸ் அமைப்பு இப்புதன் கிழமை விண்ணப்பித்துள்ளது.
Chad, Mali, Burkina Faso ஆகிய நாடுகளில் உணவு பற்றாக்குறை இருந்தாலும், Niger பகுதியே மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இங்கு 80 லட்சம் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்றும் இப்பகுதியின் காரித்தாஸ் அமைப்பின் செயலர் Raymond Yoro கூறியுள்ளார்.
இந்த உணவு பற்றாக் குறை 2005ம் ஆண்டு ஏற்பட்ட குறையை விட அதிக அளவானது என்றும், இந்தப் பற்றாக் குறையால் மிக அதிகமாய் பாதிப்புக்கு உள்ளாகப் போவது குழந்தைகளே என்றும் Raymond Yoro மேலும் கூறினார்.இந்த நெருக்கடி நிலை குறித்த எச்சரிக்கைகள் சென்ற ஆண்டு டிசம்பரிலேயே விடுக்கப்பட்டாலும், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் உலக நாடுகள் தாமதமாகச் செயல் படுகின்றன என்ற தன் வருத்தத்தையும் தெரிவித்தார், காரித்தாஸ் அமைப்பின் செயலர் Raymond Yoro.







All the contents on this site are copyrighted ©.