2010-06-17 15:08:05

இயேசு சபைக் குரு எழுதிய இந்திய திரைப்படங்கள் குறித்த புதியதொரு புத்தகம் கொல்கொத்தாவில் வெளியிடப்பட்டது


ஜூன்17,2010 இயேசு சபைக் குரு Gaston Roberge எழுதிய இந்திய திரைப்படங்கள் குறித்த புதியதொரு புத்தகம் இச்செவ்வாயன்று கொல்கொத்தாவில் வெளியிடப்பட்டது.
"The Indian Film Theory: Flames of Sholay, Notes and Beyond" என்ற தலைப்பில் வெளியான இந்தப் புத்தகத்தை, திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட வல்லுனர்கள், விமர்சனையாளர்கள் என அனைவரும் புகழ்ந்துள்ளனர்.
இந்தியாவுக்கே உரித்தான திரைப்பட கோட்பாடுகளை உலகறியச் செய்யும் வகையில் இந்தப் புத்தகம் அமைந்துள்ளதென வங்காளத் திரைப்பட தயாரிப்பாளரும், அறிஞருமான Ashok Vishwanathan கூறினார்.
இன்றைய இந்தியாவில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெறும் திரைப் படங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த இந்திய நாட்டிய சாஸ்திரங்களில் காணக்கிடக்கின்றன என்று இப்புத்தகத்தின் ஆசிரியர் இயேசு சபைக் குரு Gaston Roberge கூறினார்.‘சித்ரபானி’ என்ற தொடர்பு சாதன மையத்தை கொல்கொத்தாவில் உருவாக்கியதோடு, திரைப்படங்கள் குறித்து 25 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ள குரு Gaston Roberge, iPod கலாச்சாரம் பெருகியுள்ள இந்தக் காலக் கட்டத்திலும், திரைப்படங்கள் இன்னும் மக்களிடையில் அழியாது என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.