2010-06-16 15:35:16

ஹைதராபாத் பகுதியில், Bandlaguda பங்குக் கோவில் தாக்கப்பட்டதைக் கண்டித்து நடந்த கண்டன ஊர்வலத்தை காவல் துறையினர் அடக்க முற்பட்டனர்


ஜூன்16,2010 இஞ்ஞாயிறன்று ஆந்திராவில், ஹைதராபாத் பகுதியில், Bandlaguda பங்குக் கோவில் தாக்கப்பட்டு சேதமடைந்ததைக் கண்டித்து அந்த பங்கு மக்கள் கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டதை அங்குள்ள காவல் துறையினர் அடக்க முற்பட்டனர்.
இஞ்ஞாயிறு அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதலால், அந்தக் கோவிலில் இருந்த அதிதூதரான புனித மைக்கில் உருவச் சிலையும், தேவதாயின் உருவச் சிலையும் உடைக்கப்பட்டிருந்ததாகவும், அந்தச் சிலைகளுக்கு அருகில் இந்து அடிப்படை வாதக் குழுக்கள் அடிக்கடி பயன்படுத்தும் காவி நிறத் துணி காணப்பட்டதாகவும் பங்கு தந்தை Bokkala Rayappa கூறினார்.
இத்தாக்குதலைக் கண்டித்து பங்கு மக்கள் மேற்கொண்ட கண்டன ஊர்வலத்தைத் தடுத்த காவல் துறையினர், இது போன்ற ஊர்வலம் நகரில் மேலும் பதட்ட நிலையை உருவாக்கும் என்று கூறியது.கிறிஸ்துவர்கள் என்ற காரணத்தால், காவல் துறையினர் தங்களை அடக்க முயல்வதாகவும், இதே நிலை ஒரு இந்து அல்லது முஸ்லிம் தொழுகைக் கூடத்திற்கு ஏற்பட்டிருந்தால், பெரும் கலவரமே வெடித்திருக்கும் என்றும் Bandlaguda பங்குத் தந்தையான சலேசிய குரு Bokkala Rayappa கூறினார்.







All the contents on this site are copyrighted ©.