2010-06-16 15:37:47

மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள பல ஏழைகளுக்கு அமெரிக்க ஆயர் பேரவை நிதி உதவி அளித்துள்ளது


ஜூன்16,2010 மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் உள்ளடக்கிய பல ஏழைகளுக்கு உதவும் நோக்கத்துடன் அமெரிக்க ஆயர் பேரவையின் மனித முன்னேற்றத்திற்கான துணைக் குழு மூன்று லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி அளித்துள்ளது.
இந்த எண்ணெய்க் கசிவு மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் ஏற்பட்டுள்ள ஒரு பெரும் அழிவு என்று இக்குழுவின் செயலரான Mississippi ஆயர் ரோஜர் மோரின் கூறினார்.
கத்தோலிக்கத் திருச்சபை மனித குலத்தின் முன்னேற்றத்தில் எப்போதும் ஆர்வம் கொண்டிருப்பதற்கு இந்த நிதி உதவி மீண்டும் ஓர் எடுத்துக்காட்டு என்று ஆயர் மோரின் மேலும் கூறினார்.இந்த எண்ணெய்க் கசிவினால் தங்கள் உறவுகளையும், குடும்ப வருமானங்களையும் இழந்துள்ள பல குடும்பங்கள் இந்த உதவியால் பெரிதும் பயனடைவர் என்றும், அம்மக்கள் சார்பில் நன்றியோடு இவ்வுதவிகளைத் தான் பெறறுக்கொள்வதாகவும் New Orleans உயர்மறைமாவட்ட பேராயர் Gregory Aymond கூறினார்.







All the contents on this site are copyrighted ©.