2010-06-15 08:17:11

சமூக இணக்க வாழ்வைக் குலைக்காதீர்கள் என அரசியல்வாதிகளை வேண்டியுள்ளனர் கேரள ஆயர்கள்.


ஜூன் 14, 2010. சமூக இணக்க வாழ்விற்கு இடையூறாக இருக்கும் விடயங்களை வெளியிடுவதிலிருந்து கேரள அரசியல்வாதிகள் விலகியிருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் கேரள ஆயர்கள்.

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தலைவர்கள் தங்கள் மக்களிடையே பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வாய்ப்பு உள்ளது என கேரள மார்க்ஸிய முதல்வர் அண்மையில் அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு கண்டனம் தெரிவித்த அம்மாநில ஆயர் அவையின் தலைவர் ஆயர் ஜோசுவா மார் இக்னாதியோஸ், அரசியல்வாதிகளின் சில அறிக்கைகள் சமூக இணக்க வாழ்வுக்கு ஊறு விளைவிக்கக்கூடும் என்றார்.

கேரளாவின் சிறுபான்மை சமூகத்தினர் எப்போதும் பெரும்பான்மை சமூகமான இந்துமதத்தினரை மதித்தே வந்துள்ளனர், ஆனால் அரசியல் வாதிகளே சமூகப் பிரிவினைகளை ஊக்குவிக்க முயல்கின்றனர் எனக் குற்றம் சாட்டினார் ஆயர்.

கேரளாவின் கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இரு அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க தலத்திருச்சபை நடுநிலையாளராகச் செயல்பட்டது என்றக் குற்றச்சாட்டில் உண்மையேதும் இல்லை எனவும் கூறினார் ஆயர் இக்னாதியோஸ்.








All the contents on this site are copyrighted ©.