2010-06-15 15:39:32

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் வளர்ச்சித்திட்டங்களில் உதவ தலத்திருச்சபை எப்போதும் தயார் என்கிறார் பேராயர் மால்கம் ரஞ்சித்.


ஜூன் 15, 2010. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் வளர்ச்சித் திட்டங்களில் அரசுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தலத்திருச்சபை எப்போதும் தயாராக இருப்பதாக அறிவித்தார் கொழும்பு பேராயர் மால்கம் இரஞ்சித்.

இச்செவ்வாயன்று தன்னை வந்துச் சந்தித்த இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சாமல் ராஜபக்ஷேயிடம் இதனைத் தெரிவித்த பேராயர், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலத்திருச்சபை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிக் கொடுத்ததுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்ததையும் சுட்டிக்காட்டினார். இதைப்போல் நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கத் தலத்திருச்சபை தயாராக உள்ளது என்றார் பேராயர்.

பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த உதவும் வண்ணம் கண்காணிப்பு அவை ஒன்றை உருவாக்க உதவ வேண்டும் எனவும் சபாநாயகரிடம் விண்ணப்பித்தார் பேராயர் இரஞ்சித்.








All the contents on this site are copyrighted ©.