2010-06-11 15:25:39

ஜூன் 12. நாளும் ஒரு நல்லெண்ணம்


நம்புங்கள்.

எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் நமக்கு.

நம்பியேக் கெட்டேன் என அரற்றாதீர்கள்.

பட்ட அடி நாளை பாடமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் புதிய நாள்.

ஒவ்வொரு நாளிலும் புதுப்புது நிகழ்வுகள்.

ஒவ்வொரு நிகழ்வும் ஓர் அனுபவம்.

ஒவ்வோர் அனுபவமும் புதியதொரு பாதை.

நம்புங்கள்.

அனுபவக் கைத்தடிகள் கரை சேர்க்கும்.

நம்புங்கள்.

பறவையை விட நம்மால் உயரேப் பறக்க முடியும்.

பாம்பை விட நெளிந்துச் செல்ல முடியும்.

பலம் வாய்ந்த யானையை விட மரங்களைச் சாய்க்க முடியும்.

நம்புங்கள்.

மாறுபட்டுச் சிந்திக்கவும் வேறுபட்டுச் செயல்படவும் நம்மால் முடியும்.

அரசியல், அறிவியல் புரட்சிக்கும் ஆன்மீக மறுமலர்ச்சிக்கும் நாம் வித்திட முடியும்.

அலசி ஆராய்ந்து, கணக்கிட்டு, திட்டமிட்டு காணுவோம் கவினுறுக் காட்சிகளை வாழ்வில்.

நம்புவோம். நல்லதை நோக்கி நகர்வோம்.








All the contents on this site are copyrighted ©.