2010-06-08 16:10:19

ஆஸ்திரேலியாவின் சில மறைமாவட்டங்களில் குருமட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது


ஜூன்08,2010 ஆஸ்திரேலியாவின் சில மறைமாவட்டங்களில் குருமட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது தலத் திருச்சபை.
சிட்னியின் புனித மரி பேராலயத்தில் கர்தினால் ஜார்ஜ் பெல் வரும் வெள்ளியன்று 6 பேரை குருக்களாகத் திருநிலைப்படுத்த உள்ளது, 1983ம் ஆண்டிற்குப் பின்னான பெரிய எண்ணிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு குருமட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஒரு புதுமை என்றேச் சொல்லவேண்டும் என்ற மெல்போர்னின் Corpus Christi குருமட அதிபர் குரு Brendan Lane அம்மறைமாவட்டத்திலும் இவ்வாண்டு 6 குருக்களின் திருநிலைப்பாட்டுச் சடங்கு இடம்பெறும் என்றார்.
2000மாம் ஆண்டில் 17 குருமட மாண்வர்களையேக் கொண்டு குருக்களின் பற்றாக்குறையை மிகப்பெரிய அளவில் சந்தித்த சிட்னி மறைமாவட்டத்தில் தற்போது 63 குருமடமாணவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலும் உலக இளையோர் தினங்களும் இன்றைய இளையச் சமூகத்திற்கு துண்டுதலாக இருந்து குருமட மாணவர்கள் பெருக உதவியுள்ளனர் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார் சிட்னி நல்லாயன் குருமட அதிபர் குரு அந்தோனி பெர்ஸி.







All the contents on this site are copyrighted ©.