2010-06-07 15:09:38

ஜூன் 08 நாளும் ஒரு நல்லெண்ணம்


சிற்பி ஒருவர் சிலை ஒன்று செய்து கொண்டிருந்தார். அதன் பக்கத்தில் அதைப் போல் இன்னொரு சிலை இருந்தது. ஏன் இரண்டு சிலைகளை ஒரே மாதிரி வடிக்கின்றீர்கள்? என வழிப்போக்கன் ஒருவன் வினவ, சிற்பியோ அதில் ஒரு குறை வந்துவிட்டது. ஆகவே இன்னொன்று வடிக்கிறேன் என்றார். தெய்வத்தைச் சுற்றிச்சுற்றி வலம் வருவதைப் போல அந்தச் சிலையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தவன் ஆச்சரியப்பட்டான். அவனால் எந்தக் குறையையும் காண முடியவில்லை. இதை எங்கே வைக்கப் போகிறீர்கள்? என வழிப்போக்கன் வினவ, சிற்பியோ நூறு அடி உயரத்தில் எனப் பதில் கூறினார். வழிப்போக்கனோ, பக்கத்தில் பலமுறை பார்த்த என் கண்ணுக்கே எந்தக் குறையும் தெரியவில்லை. நூறு அடி உயரத்திலாத் தெரியப் போகிறது எனச் சொல்லிச் சிற்பியைக் கிண்டலாகப் பார்த்தான். சிற்பியோ அவனிடம், இந்தக்குறை எனக்குத் தெரியும். என் மனச்சான்றுக்குப் புரியும். என் வேலையை என்னால் பாராட்ட முடியாது என்றார். ஒரு செயலை ஒருவர் செய்து முடித்தவுடன் அதற்கு முதல் பாராட்டு தன்னிடமிருந்தே கிடைக்க வேண்டும். அடுத்த பாராட்டு கடவுளிடமிருந்து கிடைக்க வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.