2010-06-07 16:06:08

இந்தோனேசிய நாடு எதிர்கொள்ளும் தீவிரமான இரு அபாயங்கள் குறித்து இயேசு சபை குரு விடுத்துள்ள எச்சரிக்கை


ஜூன்07, 2010 கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரமும், சமய அடிப்படைவாதமும் இந்தோனேசிய நாடு எதிர்கொள்ளும் தீவிரமான இரு அபாயங்கள் என்று இயேசு சபை குரு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இந்தோனேசியாவைக் கட்டியெழுப்புதல்” என்ற பொருளில் சென்ற வாரம் ஜகார்த்தாவில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய Franz Magnis-Suseno என்ற இயேசு சபைக் குரு இவ்வாறு கூறினார்.
நாட்டின் அடிப்படைக் கலாச்சாரம் பஞ்சசீலக் கொள்கைகளில் அடங்கியுள்ளதாகக் கூறிய அருட்தந்தை Franz, 1945ல் நிறுவப்பட்ட அரசியல் சாசனம் பஞ்சசீலக் கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது, அதன்படி, கடவுள் பக்தி, நாட்டின் ஒருமைப்பாடு, குடியரசு, நீதி என்பவை இந்தோனேசியாவின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டினார்.இந்தோனேசியாவில் தற்போது பரவலாகக் காணக் கிடக்கும், போதைப் பொருள் ஆதிக்கம், சமுதாய அக்கறையின்மை, பொது வாழ்வில் சட்டம் ஒழுங்குகளின் சீர்குலைவு ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடைகளாக உள்ளதென அருட் தந்தை Franz Magnis-Suseno மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.