2010-06-07 16:04:40

இந்தியக் கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவ நிறுவனங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உழைக்க அழைப்பு


ஜூன்07, 2010 இந்தியக் கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவ நிறுவனங்களும் சுற்றுச்சூழல் அக்கறைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சுற்றுச்சூழல் சவால்களை கையிலெடுத்துச் செயலாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது இந்தியக் கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை.
பலவகைப்பட்ட உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கென நாம் இறைவனுக்கு நன்றி கூறும் அதேவேளை, தனிப்பட்ட மனிதர்களின் பேராசையால் ஒவ்வொரு நாளும் இவ்வுலகிலிருந்து இயற்கை வளங்கள் காணாமற்போய் வருவதைக் குறித்தும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார் இந்தியக் கிறிஸ்தவ சபைகளின் நீதி, அமைதி மற்றும் இயற்கைக்கான அவையின் செயலர் குரு. கிறிஸ்டோபர் ராஜ்குமார்.
உலகத்தைப் படைத்து அதனை இப்போதும் காத்து வருபவர் இறைவனே என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சமூகங்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் சவால்களை மேற்கொள்ள உழைக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.வல்லுனர்களின் கூற்றுப்படி, இவ்வுலகின் தவறான அணுகுமுறைகளால் ஒவ்வொரு நாளும் இவ்வுலகின் 3 கோடி முதல் 5 கோடி உயிரினங்களுள் 100 இனங்கள் அழிவுக்குள்ளாகி வருகின்றன. 17,291 உயிரினங்கள் அழிவுறும் தறுவாயில் இருப்பதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.