2010-06-07 16:05:49

Gaza பகுதியில் இஸ்ராயேல் ராணுவத்தின் தடைகளை விலக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அயர்லாந்து கர்தினால்


ஜூன்07, 2010 Gaza பகுதியில் இஸ்ராயேல் ராணுவத்தால் விதிக்கப்பட்டுள்ளத் தடைகளை விலக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அயர்லாந்து கர்தினால் Sean Brady.
இப்பகுதியில் சர்வதேசச் சட்டம் மதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது உலகின் அனைத்து நாடுகளின் கடமையாகிறது என்றார் கர்தினால்.
கடந்த வாரம் திங்களன்று உதவிக் கப்பல் ஒன்றை இஸ்ராயேல் ராணுவத்தினர் தாக்கியதில் கொல்லப்பட்ட 9 துருக்கியர்களின் குடும்பங்களுக்குத் தன் அனுதாபங்களை வெளியிடுவதாகவும் உரைத்த அயர்லாந்து கர்தினால், இச்செயல் சர்வதேசக் கடற்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார்.
அனைவருக்குமான நீதி மற்றும் நீடித்த அமைதியை மத்தியக்கிழக்குப் பகுதியில் அனுமதிப்பதற்கு உண்மையான ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என்றார் கர்தினால் Sean Brady.மத்தியக்கிழக்கு நாடுகளின் பிரகாசமான வருங்காலத்தை உறுதிச் செய்வதற்கான சர்வதேச நாடுகளின் கடமையையும் வலியுறுத்தினார் அயர்லாந்து கர்தினால்.







All the contents on this site are copyrighted ©.