2010-06-04 16:17:23

ஹாங் காங்கில் ஜூன் 4 நிகழ்வு என்று நடைபெற்ற செப வழிபாடுகளில் கத்தோலிக்க விசுவாசிகள் பெருமளவில் பங்கேற்றனர்


ஜூன்04,2010 ஹாங் காங்கின் பல்வேறு ஆலயங்களில் ‘ஜூன் 4 நிகழ்வு’ என்று நடைபெற்ற செப வழிபாடுகளில் கத்தோலிக்க விசுவாசிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
21 ஆண்டுகளுக்கு முன்னால் 1989 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று சீனாவின் தியனன்மென் சதுக்கத்தில் சீன அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 241 பேர் கொல்லப்பட்டதையும், 7000க்கும் அதிகமானோர் காயமடைந்ததையும் நினைவு கூர்ந்து, பல இடங்களில் மெழுகு திரி ஏற்றப்பட்ட இரவு கண்விழிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.மே மாதம் 29 ஆம் தேதி குடியரசு தேவதை என்ற சிலை ஒன்று ஹாங் காங்கில் நிறுவப்பட்டதை காவல் துறை தடுத்ததாகவும், அரசின் கட்டுப்பாடுகளைக் கடந்து இந்த நாளை நினைவு கூற “ஹாங் காங் குடியரசு ஒன்றிப்பு” என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 4 ஆம் நாளை குடியரசுக்கான வேண்டுதல் நாளாக அனுசரிக்க இருப்பதாக ஜெபக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் Lina Chan Lai-na கூறினார்.







All the contents on this site are copyrighted ©.