2010-06-04 16:16:07

ஆகத்தா புயலால் கவுத்தமாலாவில் பாதிக்கப்பட்டோருக்குத் தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை


ஜூன்04,2010 ஆகத்தா புயலால் கவுத்தமாலாவில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கும், துயரங்களுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் அனுதாபங்களைத் தாங்கிய இந்தத் தந்தியை கவுத்தமாலாவில் உள்ள திருப்பீடத் தூதுவர், பேராயர் பால் கல்லகெருக்கு திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே இப்புதனன்று அனுப்பினார்.
கவுத்தமாலாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அகில உலக கிறிஸ்துவ சமூகத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.இந்தப் புயலால் அனைத்தையும் இழந்துள்ள மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தைக்கும், உதவிகள் செய்து வரும் கவுத்தமாலா காரித்தாஸ் அமைப்புக்கும், Escuintla மறைமாவட்ட ஆயர் Victor Hugo Palma தன் நன்றிகளைக் கூறியுள்ளார். சோதனைகள் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் இறைவாக்கு இந்த மக்களுக்கு ஒளியாக இருக்க வேண்டும் என்றும் ஆயர் Palma தன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.