2010-06-03 14:57:49

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாட்டு கருத்தரங்கில் திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளர் பேராயர் Silvano Tomasi உரையாற்றினார்


ஜூன்03,2010 உலகின் பல நாடுகள், சிறப்பாக வளர்ந்து வரும் நாடுகள் செலுத்த வேண்டிய கடன் தொகை அந்த நாடுகளில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகள், வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்ததொரு பார்வையில் நோக்கப்பட வேண்டும் என்று பேராயர் Silvano Tomasi கூறினார்.
‘மனித உரிமைகளும் அயல்நாட்டு கடனும்’ என்ற தலைப்பில் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாட்டு கருத்தரங்கில் இப்புதனன்று உரையாற்றிய திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளர் பேராயர் Tomasi இவ்வாறு கூறினார்.
2008 ஆம் ஆண்டின் பின் பகுதியில் உலகம் கண்ட பொருளாதார பின்னடைவு, 2009 ஆண்டின் பெரும் பகுதியிலும், நடக்கும் ஆண்டிலும் தொடர்கிறது என்று கூறிய பேராயர் Tomasi, இந்த பொருளாதார பிரச்சனை, வளர்ச்சியில் பெரிதும் பின் தங்கியுள்ள நாடுகளை மிக அதிகமாகப் பாதித்து வருகிறதென சுட்டிக் காட்டினார்.கடன் வழங்கும், கடன் பெறும் நாடுகளுக்கிடையே ஆழமான நம்பிக்கை வளரும் போதுதான் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகளைக் காண முடியும் என்று திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளர் பேராயர் Tomasi கூறினார்.







All the contents on this site are copyrighted ©.