2010-06-02 16:00:06

இந்தியத் திரைப்படம் ஒன்று அகில உலக கத்தோலிக்கத் திரைப்பட விழாவில் முதல் பரிசை வென்றுள்ளது


ஜூன்02, 2010 கேரளாவின் கார்மேல் அன்னை சபையினர் உருவாக்கிய திரைப்படம் ஒன்று போலந்து நாட்டில் கடந்த ஞாயிறன்று நிறைவு பெற்ற 25வது அகில உலக கத்தோலிக்கத் திரைப்பட விழாவில் முதல் பரிசை வென்றுள்ளது.
‘நுருங்குவெட்டங்கல்’ (Nurunguvettangal) என்ற 56 நிமிட மலையாளத் திரைப்படம் ஒரு கிராமத்தில் வாழும் ஏழு கன்னியர்களை மையமாக்கி எடுக்கப்பட்டுள்ளது. கன்னியர்கள் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பல சவால்களை இத்திரைப்படம் சித்தரிக்கிறதென செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அண்மையில் வெளியான "Amen" என்ற புத்தகம் உட்பட கன்னியர்கள் வாழ்வைக் குறித்துத் தொடர்ந்து ஊடகங்களில் வெளிவரும் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தத் திரைப்படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத் தக்கது.இந்தியா, சீனா, தாய்வான் உட்பட 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் திரைப்பட விழாவில் 172 திரைப்படங்கள் திரையிடப்பட்டன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.